செய்திகள்
முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது- முதல்வர் பழனிசாமி

Published On 2020-04-06 08:19 GMT   |   Update On 2020-04-06 08:29 GMT
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் தடுப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை:

சென்னை மாவட்ட கலெக்டர்கள் உடனான ஆலோசனைக்கு பிறகு முதல்வர் பழனிசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவில் கொரோனாவின் வீரியம் படிப்படியாக அதிகரித்து வருவதால் தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தமிழக்தில் மேலும 21 இடங்களில் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டுள்ளது. விரைவில் பரிசோதனை முடிவுகளை அறிந்துகொள்ள 1 லட்சம் rapid test kit கருவிகள் வாங்கப்படவுள்ள. 

ரேபிட் டெஸ்ட் கருவிகள் வந்தவுடன் கொரோனா அறிகுறி உள்ளதா என விரைந்து பரிசோதனை செய்யப்படும். 30 நிமிடங்களில் பரிசோதனை செய்யும் வகையில் ஒரு லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்பட உள்ளன. 3, 371 வெண்டிலேட்ர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ளன, கொரோனாவின் தாக்கம் குறைய தனிமைப்படுத்தப்படுவதே ஒன்றே தீர்வு .

விமான நிலையத்தில் 2 10, 538 பயணிகள் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரானாவை ஒழிக்க முடியும். மத்திய அரசிடம் இருந்து முதற்கட்டமாக ரூ. 500 கோடி வந்துள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News