செய்திகள்
முதலைகள், பாம்புகளுடன் ரபி பிர்சாடா

முதலைகள், பாம்புகளை வைத்து பிரதமர் மோடிக்கு மிரட்டல் -பாக்.பாடகி மீது வழக்குப்பதிவு

Published On 2019-09-16 03:17 GMT   |   Update On 2019-09-16 03:17 GMT
வீட்டில் பாம்புகள், முதலைகளை காண்பித்து பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுக்கும் விதமாக வீடியோ வெளியிட்ட பாகிஸ்தான் பாடகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானைச் சேர்ந்தவர் ரபி பிர்சாடா. இவர் கடந்த 5ம் தேதி தனது டுவிட்டர் பக்கத்தில் முதலைகள், பாம்புகளை வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது:

நான் காஷ்மீர் பெண். இந்த பரிசுகள்(பாம்புகள், முதலைகள்) மோடிக்காகத்தான். நீங்கள் காஷ்மீர் மக்களை மிகவும் துன்புறுத்துகிறீர்கள். இதற்காக இவற்றை தயாராக வைத்துள்ளேன்.

நீங்கள் நரகத்தில் இறக்க தயாராக இருங்கள். என் நண்பர்களாகிய இவர்கள் (பாம்புகள், முதலைகள்)  உங்களுக்கு விருந்து வைப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



இதன் பின்னர் பாடலையும் பாடுகிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து பாகிஸ்தானின் பஞ்சாப்  பகுதி வனத்துறை, ரபி  சட்ட விரோதமாக வன விலங்குகளை வீட்டில் வைத்திருப்பதாக வழக்குப்பதிவு செய்துள்ளது.

இது குறித்து கோர்ட்டும் ரபிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்பது  குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News