செய்திகள்
ஏற்றுமதிக்கு வழிகாட்டும் கருத்தரங்கு மற்றும் கண்காட்சியை மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

தொழில் துறையினர் கோரிக்கைகளை தமிழக அரசு உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறது - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேச்சு

Published On 2021-09-25 12:14 GMT   |   Update On 2021-09-25 12:14 GMT
முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர்:

மத்திய வர்த்தகம், தொழில் துறை, வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம், மாவட்ட தொழில் மையம் ஆகியவற்றின் சார்பில் ஏற்றுமதியாளர்கள் கண்காட்சி திருப்பூர் அருகே உள்ள ஐ.கே.எப். வளாகத்தில் நடைபெற்றது.
இக்கண்காட்சியைத் தொடங்கி வைத்து செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-

இந்தியாவில் கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா நோய்த் தொற்று குறையாமல் உள்ளது. ஆனால் முதல்வர் மு.க. ஸ்டாலின் எடுத்த நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் இன்னும் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் ஜவுளித் தொழிலின் வளர்ச்சி காரணமாக உலக வர்த்தகத்தில் கொங்கு மண்டலம் தனி இடத்தைப் பிடித்துள்ளது.

தொழில் துறையினர் வைக்கும் கோரிக்கைகளை தமிழக அரசு உடனுக்குடன் நிறைவேற்றிக் கொடுக்கிறது. அதன்படி பஞ்சுக்கு ஒரு சதவீத வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது தமிழக ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.இக்கொள்கை தொழில் வளர்ச்சிக்கு உதவுவதுடன், அந்நியச் செலாவணியையும் அதிகமாக ஈட்டிக்கொடுக்கும் என்றார்.

இக்கண்காட்சியில் தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகள், பின்னலாடை உற்பத்தி, கயிறு உற்பத்தி உள்ளிட்டவை தொடர்பாக 37 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

இதன் தொடக்க விழாவில், மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத், செல்வராஜ் எம்.எல்.ஏ.,, வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தின் பொது இணை இயக்குநர் டி.ஸ்ரீதர், ஏ.இ.பி.சி., தலைவர் ஏ.சக்திவேல், திருப்பூர்ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம், கனரா வங்கியின் முதன்மை பொது மேலாளர் பழனிசாமி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.   
Tags:    

Similar News