உள்ளூர் செய்திகள்
தமிழக அரசு

கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய மகளிர் சுய உதவிக்குழு கடன் ரத்து - தமிழக அரசு

Published On 2021-12-03 20:51 GMT   |   Update On 2021-12-03 20:51 GMT
கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய மகளிர் சுய உதவிக்குழு கடனை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: 

கூட்டுறவு சங்கம் மூலம் மகளிர் சுய உதவிக் குழுவினர் வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்படுகிறது. 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி வரையில் நிலுவையில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுவினர் பெற்ற 2,756 கோடி ரூபாய் கடன் தொகை ரத்து செய்யப்படுகிறது.

இந்த ஆண்டில் முதல் கட்டமாக ரூ.600 கோடி விடுவிக்கப்படுகிறது. மீதமுள்ள தொகை 7 சதவீத வட்டியுடன் அடுத்த 4 ஆண்டுகளில் நிபந்தனையுடன் விடுவிக்கவும் அனுமதிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News