செய்திகள்

இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம்- பளுதூக்கும் வீரர் அசத்தல்

Published On 2018-10-09 07:38 GMT   |   Update On 2018-10-09 07:38 GMT
இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இந்திய பளுதூக்கும் வீரர் ஜெர்மி லால்ரினுங்கா தங்கம் வென்றார். இந்தியாவிற்கு கிடைத்த முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.#YouthOlympics2018 #JeremyLalrinnunga
பியூனஸ் அயர்ஸ்:

மூன்றாவது இளையோர் ஒலிம்பிக் போட்டி அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் நடந்து வருகிறது. 206 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் இந்தியா சார்பில் 47 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

நேற்று இரவு 62 கிலோ எடைப்பிரிவு ஆண்களுக்கான பளுதூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் இளம் விரர் ஜெர்மி லால்ரினுங்கா (வயது 15) மொத்தம் 274 கிலோ பளு தூக்கி தங்கப்பதக்கம் வென்றார். இளையோர் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு கிடைத்த முதல் தங்கம் இதுவாகும்.



இப்போட்டியில் துருக்கி வீரர் டாப்தாஸ் கானர் (263 கிலோ) வெள்ளிப் பதக்கமும், கொலம்பியாவின் வில்லார் எஸ்டிவன் ஜோஸ் (260 கிலோ) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த ஜெர்மி லால்ரினுங்கா, இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இளையோர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், ஜூனியர் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றார். இரண்டு தேசிய சாதனைகளையும் முறியடித்தது குறிப்பிடத்தக்கது. #YouthOlympics2018 #JeremyLalrinnunga
Tags:    

Similar News