உள்ளூர் செய்திகள்
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு,

சித்திரை திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள்

Published On 2022-04-15 10:35 GMT   |   Update On 2022-04-15 10:35 GMT
பரமக்குடியில் சித்திரை திருவிழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
பரமக்குடி

பரமக்குடி சித்திரை திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் சங்கர்லால் குமாவத் திடீர் ஆய்வு செய்தார்.

பரமக்குடியில் இன்று இரவு சுந்தரராஜப்பெருமாள் கோவில் சித்திரைத்திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

மதுரைக்கு அடுத்தபடியாக மிகப்பிரம்மாண்டமாக நடைபெறும் சித்திரை திருவிழாவில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர். 

திருவிழா நடைபெறும் இடங்களை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பரமக்குடி சார்ஆட்சியர் முருகன், வட்டாட்சியர் தமீம்ராஜா ஆகியோர் இடம் கேட்டறிந்தார். பின்பு சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள், காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். 

ஆய்வின்போது பரமக் குடி காவல் துணை கண்காணிப்பாளர் திருமலை, வருவாய்த்துறை, நகராட்சி அலுவலர்கள் மற்றும் சுந்தரராஜபெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் உடனிருந்தனர்.
Tags:    

Similar News