ஆன்மிகம்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு பந்தற்கால் நாட்டு விழா நடைபெற்றது.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி திருவிழா பந்தற்கால் நாட்டுவிழா

Published On 2021-01-29 06:51 GMT   |   Update On 2021-01-29 06:51 GMT
பெண்களின் சபரிமலை என போற்றப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு பந்தற்கால் நாட்டு விழா நடைபெற்றது.
பெண்களின் சபரிமலை என போற்றப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி பெருந் திருவிழா அடுத்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.

இதற்கான பந்தற்கால் நாட்டு விழா தைப்பூச நாளான நேற்று நடந்தது. விழாவன்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு அபிஷேகம்,காலை 6.30 மணிக்கு உஷபூஜை, 7.30 மணிக்கு நிறை புத்தரிசி பூஜை நடந்தது.

தொடர்ந்து பந்தற்கால் நாட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்ட கோவில் இணை ஆணையர் அன்புமணி, அறங்காவலர் குழு தலைவர் சிவகுற்றாலம், கோவில் தந்திரி மகா தேவரு அய்யர், தேவசம் கண்காணிப்பாளர் செந்தில் குமார், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கோவில் என்ஜினீயர் அய்யப்பன் மற்றும் ஹைந்தவ சேவா சங்க நிர்வாகிகள் உள்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News