செய்திகள்
கோப்புபடம்

கிராமப்புறங்களில் நிலத்தடி நீர் பாதுகாப்பு திட்டப்பணிகள் தீவிரம்

Published On 2021-09-13 06:26 GMT   |   Update On 2021-09-13 06:26 GMT
தனிநபர் உறிஞ்சு குழி அமைக்க ரூ.9,500, சமுதாய உறிஞ்சு குழி அமைக்க ரூ.3.75 லட்சம் மானியமாக வழங்கப்படும்.
திருப்பூர்:
 
ஊராட்சி மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய மத்திய, மாநில அரசு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு திட்டமும், அடிப்படை வசதிகளை உருவாக்கும் நோக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை வாய்ப்பு வழங்கப்படுவதுடன், ஊராட்சி மக்களின் அடிப்படை வசதியை நிறைவேற்றும் பணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

அதுபோன்ற திட்டங்களை ஒருங்கிணைத்து நிலத்தடி நீர் பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

தேசிய வேலை உறுதி திட்டம், 15வது நிதிக்குழு மானியம், பொதுநிதி ஆகிய நிதி ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு நிலத்தடி நீர் பாதுகாப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் நிலத்தடி நீரை பாதுகாக்கும் பணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி குளியலறை, சமையலறை கழிவுநீரை சேகரித்து பூமியில் இறக்கும் உறிஞ்சு குழி அமைக்கப்படும். மழைநீர் வடிகால் மற்றும் சாக்கடை கால்வாய்களுக்கான அகற்றும் வசதி இல்லாத இடங்களில் சமுதாய உறிஞ்சு குழிகள் அமைக்கப்படும்.

இத்திட்டம் முதல்கட்டமாக ஒன்றியத்தில் உள்ள 6 ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும். தனிநபர் உறிஞ்சு குழி அமைக்க ரூ.9,500, சமுதாய உறிஞ்சு குழி அமைக்க ரூ.3.75 லட்சம் மானியமாக வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். 
Tags:    

Similar News