செய்திகள்
அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் மீண்டும் வாகன கட்டுப்பாடு திட்டம்: கெஜ்ரிவால் அறிவிப்பு

Published On 2019-09-14 02:03 GMT   |   Update On 2019-09-14 02:03 GMT
டெல்லியில் குளிர்காலத்தில் காற்று மாசின் அளவை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிக்கை வெளிட்டுள்ளார்.
புதுடெல்லி :

டெல்லியில் குளிர்காலத்தில் காற்று மாசின் அளவை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒற்றைப்படை, இரட்டைப்படை எண்கள் அடிப்படையில் வாகன இயக்கம் மீண்டும் வருகிற நவம்பர் 4-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை அமல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்துவது இது 3-வது முறை.

நவம்பர் மாதம் அண்டை மாநிலங்களில் பட்டாசு வெடிப்பதாலும், வயல்களை எரிப்பதாலும் டெல்லியில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே வருகிற தீபாவளிக்கு டெல்லியில் மக்கள் பட்டாசு வெடிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். காற்று மாசுவில் இருந்து தப்பிக்க மாசு முகமூடிகள் அரசு சார்பில் அக்டோபர் மாதம் முதல் மக்களுக்கு வழங்கப்படும். மாசு கட்டுப்பாட்டுக்கு தனி செயல்திட்டம் கொண்டுவரப்படும்.

இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.

Tags:    

Similar News