உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

ஈரோட்டில் 88.01 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி

Published On 2022-01-11 10:42 GMT   |   Update On 2022-01-11 10:42 GMT
ஈரோடு மாவட்டத்தில் 88.01 சதவீதம் பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மாவட்ட சுகாதார துணை இயக்குநர் சோமசுந்தரம் தெரிவித்தார்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் 88.01 சதவீதம் பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மாவட்ட சுகாதார துணை இயக்குநர் சோமசுந்தரம் தெரிவித்தனர்.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இத்துடன் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்றும் பரவி வருகிறது.

இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப் பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 15-18 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது.

இதில் ஈரோடு மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகையான 23 லட்சத்து 77 ஆயிரத்து 315 பேரில், 18வயதுக்கு மேற்பட் டவர்கள் 18 லட்சத்து 9 ஆயிரத்து 100பேரும், 15-18 வயதுக்கு உட்பட்டவர்கள் 1 லட்சத்து 4ஆயிரத்து 106பேர் உள்ளனர்.

இவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

மேலும் மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலமும் லட்சக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இதுவரை முதல் தவணை தடுப்பூசி  88.01 சதவீதம் பேர், அதாவது 15 லட்சத்து 94 ஆயிரத்து 270 பேரும், 2-ம் தவணை தடுப்பூசி 63.03 சதவீதம் பேர் அதாவது 11 லட்சத்து 35 ஆயிரத்து 61 நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக   மாவட்ட சுகாதார துணை இயக்குநர் சோமசுந்தரம் தெரிவித்தார்.
Tags:    

Similar News