உள்ளூர் செய்திகள்
சிறந்த பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் விருது வழங்கிய போது எடுத்த படம்

அரியலூரில் சிறந்த பள்ளிகளுக்கு விருது

Published On 2022-04-16 10:35 GMT   |   Update On 2022-04-16 10:35 GMT
அரியலூர் மாவட்டத்தில் நிகழாண்டு தேர்ந்தடுக்கப்பட்ட சிறந்த பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
அரியலூர்:

அரியலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட விளாங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஆண்டிமடம் ஒன்றியம் சிலுவைச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, 

பட்டணங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகிய பள்ளிகள் நிகழாண்டு சிறந்த பள்ளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அப்பள்ளிகளுக்கு கேடங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமன் வழங்கினார். கேடயங்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பெற்றுக் கொண்டனர். 

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அரியலூர் கல்வி மாவட்ட அலுவலர் மான்விழி, அரியலூர் வட்டார கல்வி அலுவலர்கள் நீலமேகம், கலியபெருமாள், 

ஆண்டிமடம் வட்டார கல்வி அலுவலர் முனியம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் விளாங்குடி பள்ளி தலைமையாசிரியர் நளினா நன்றி கூறினார்.

Tags:    

Similar News