செய்திகள்
கொள்ளை

தொண்டாமுத்தூரில் கோவில் பூட்டை உடைத்து சாமி நகைகள் கொள்ளை

Published On 2021-11-27 11:03 GMT   |   Update On 2021-11-27 11:03 GMT
கோவை தொண்டாமுத்தூரில் கோவில் பூட்டை உடைத்து சாமி நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடவள்ளி:

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த தென்னமநல்லூர் பகுதியில் ஸ்ரீ கரிய காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு சந்திரன் என்பவர் பூசாரியாக உள்ளார். சம்பவத்தன்று சந்திரன் கோவிலில் பூஜைகள் முடித்து விட்டு இரவு கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

நேற்று காலை சந்திரன் வழக்கம் போல கோவிலை திறக்க வந்தார். அப்போது கோவிலின் முன்பக்க கதவின் பூட்டு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது சாமியின் கழுத்தில் இருந்த 1 பவுன் தங்க நெக்லஸ் மற்றும் செயின் திருடு போயிருந்தது தெரியவந்தது.

பின்னர் இதுகுறித்து அவர் தொண்டாமுத்தூர் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமிராக்கிளை ஆய்வு செய்தனர். இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றார். சாமி நகைகள் கொள்ளை அடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News