ஆன்மிகம்
இறைவழிபாடு

மூன்று விதமான இறைவழிபாடு

Published On 2019-09-17 08:49 GMT   |   Update On 2019-09-17 08:49 GMT
இறைவனை வணங்கி வழிபாடு செய்ய மூன்று விதமான வழிபாட்டு முறைகள் உள்ளன. அவற்றை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
* லட்சுமி வாசம் செய்யும் வேத ரேகைகள், மந்திர உபதேசங்கள் நிறைந்த நமது இரண்டு கரங்களையும் இணைத்து, இதயத்திற்கு அருகில் மார்பிற்கு நேரே மையத்தில் வைத்து, மனதில் மட்டுமே மந்திரங்களைக் கூறி இறைவனை வணங்க வேண்டும். இதற்கு ‘உத்தம நமஸ்காரம்’ என்று பெயர். மனிதனின் ஆத்ம இருப்பிடமான இதயத்தில் இருந்து வணங்குவதை இறைவன் செவிசாய்த்து கேட்பான் என்பது ஐதீகம்.

* ஆண்களுக்கு மட்டுமே உரித்தான வழிபாட்டு முறை ‘அஷ்டாங்க நமஸ்காரம்.’ இம்முறையில் அஷ்டாங்கமும் (அஷ்டம் - எட்டு; அங்கம் - உடற்பாகம்) தரையில் படும்படியாக வீழ்ந்து, இறைவனிடம் தன்னை முழுமையாக அர்ப்பணித்து வணங்க வேண்டும். தலை, முகம், இரண்டு தோள்பட்டைகள், உடல், இரண்டு முழங்கால்கள் மற்றும் பாதநுனி ஆகிய உடற்பாகங்களை தரையில் படும்படியாக வணங்க வேண்டும். இதனால் நம் வாழ்வில் ஏற்படும் பாவங்கள் நீங்கி நற்கதி உண்டாகும்.

* பெண்களுக்கு உரிய வழிபாட்டு முறை ‘பஞ்சாங்க நமஸ்காரம்.’ பஞ்சம் - ஐந்து; அங்கம்- உடற்பாகம். இம்முறையில் தலை, இரண்டு முழங்கால்கள் மற்றும் இரண்டு பாதநுனிகளை பூமியில் வைத்து இறைவனை வணங்கிட நற்பலன்கள் கிடைக்கும்.
Tags:    

Similar News