செய்திகள்
கட்சி குழுவினருடன் பரூக் அப்துல்லா சந்திப்பு

பரூக் அப்துல்லாவுடன் தேசிய மாநாட்டு கட்சிக்குழு சந்திப்பு

Published On 2019-10-06 07:33 GMT   |   Update On 2019-10-06 07:33 GMT
இரண்டு மாத வீட்டுச்சிறைக்குப் பின்னர் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லாவை தேசிய மாநாட்டுக் கட்சிக் குழுவினர் இன்று சந்தித்தனர்.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி சிறப்பு அந்தஸ்தை நீக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்மாநில முன்னாள் முதல் மந்திரிகளான உமர் அப்துல்லா மற்றும் அவரது தந்தை பரூக் அப்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர்.

இதேபோல், மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தியும் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  

இதற்கிடையே, ஜம்மு காஷ்மீரில் 2 மாத வீட்டுச் சிறையில் இருக்கும் உமர் அப்துல்லா மற்றும் பரூக் அப்துல்லாவை சந்திக்க வேண்டும் என தேசிய மாநாட்டு கட்சி தரப்பில் ஆளுநர் சத்யபால் மாலிக்கிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அவர்களது கோரிக்கையை ஏற்று பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லாவை சந்திக்க தேசிய மாநாட்டுக் கட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது. 

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா வீட்டுக்கு அக்கட்சியின் ஜம்மு மாகாணத் தலைவர் தேவேந்திர சிங் ராணா தலைமையில் 15 பேர் கொண்ட குழு இன்று காலை சென்றது. அவர்கள் பரூக் அப்துல்லாவை சந்தித்துப் பேசினர். அந்த குழுவினரிடம் பரூக் அப்துல்லா ஆலோசனை நடத்தினார்.
Tags:    

Similar News