ஆன்மிகம்
மாசி தெப்பத்திருவிழா: வெள்ளி கருட வாகனத்தில் நம்பெருமாள் வீதி உலா

மாசி தெப்பத்திருவிழா: வெள்ளி கருட வாகனத்தில் நம்பெருமாள் வீதி உலா

Published On 2021-02-19 05:33 GMT   |   Update On 2021-02-19 05:33 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் புறப்பட்டு உள்திருவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுக்கு 4 முறை கருட சேவை நடைபெறுகிறது. இதில் மூன்று கருட சேவைகளின் போது தங்கக்கருட வாகனத்தில் நம்பெருமாள் வீதியுலா வருவார். ஆனால் மாசி மாதத்தில் நடைபெறும் தெப்ப உற்சவத்தின் 4-ம் திருநாள் மட்டும் வெள்ளி கருட வாகனத்தில் நம்பெருமாள் வீதியுலா வருவார். மாசிக்கருடனை தரிசிப்பது காசிக்குச் சென்ற பலன் தரும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை ஆகும்.

அதன்படி மாசி தெப்பத்திருவிழாவின் 4-ம் நாளான நேற்று வெள்ளி கருட சேவை நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு உள்திருவீதிகளில் வலம் வந்து வழிநடை உபயங்கள் கண்டருளினார்.

பின்னர் மாலை 6 மணிக்கு நம்பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் புறப்பட்டு உள்திருவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News