உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

கோவையில் அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பஸ்களுக்கு அபராதம்

Published On 2022-04-16 09:19 GMT   |   Update On 2022-04-16 09:19 GMT
விதிமுறை மீறி இயக்கிய 2 பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை: 

தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி உள்ளிட்ட பண்டி-கை-களுக்காக, தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சொந்த ஊர்-களுக்கு செல்ல பஸ் நிலையம், ரெயில்நிலையங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. 

சொந்த ஊர் செல்ல வாகன வசதியின்றி பலரும் அவதிக்குள்ளாகினர். இதை பயன்படுத்தி பல தனியார் ஆம்னி பஸ்கள், கட்டணத்தை உயர்த்தி வசூலித்தனர். இதுதவிர முறையான அனுமதியின்றியும் பஸ்களும் இயக்கப்பட்டன.

இதுகுறித்து போக்கு-வரத்து துறை அதிகாரிகள் கடந்த 13, 14-ந் தேதி சோதனை நடத்தினர். மொத்தம் 489 பஸ்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 71 பஸ்கள் முறையான விதிகளை பின்பற்றாதது கண்டுபிடிக்கப்பட்டது; 

அவற்றுக்கு ரூ.1.66 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. விதிகளை மீறி கேரள பதிவு எண் கொண்டு இயக்கப்பட்ட பஸ் ஒன்றுக்கு, 35 ஆயிரம் ரூபாய் அபராதம்,ரூ.5.34 லட்சம் வரி என, ரூ5.69 லட்சம் வசூலிக்கப்பட்டது. மேலும் விதிகளை மீறி இயக்கப்பட்ட  2 பஸ்களை, போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை மண்டல போக்குவரத்து துறை இணை கமிஷனர் உமாசக்தி கூறும்போது, அதிக கட்டணம் வசூலிப்பது, விதிகளை மீறி இயக்குவது, பெர்மிட் இன்றி இயக்குவது குறித்து தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. விதிமீறல் கண்டறியப்பட்டால், உடனடியாக அபராதம் விதிக்கப்படுகிறது என்றார்.
Tags:    

Similar News