உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

வெள்ளிமலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 173 பேர் மீது வழக்கு

Published On 2022-05-06 09:07 GMT   |   Update On 2022-05-06 09:07 GMT
கோவில் முன்னேற்ற சங்க அலுவலகத்திற்கு சீல் : வெள்ளி மலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 173 பேர் மீது வழக்கு - பலத்த போலீஸ் பாதுகாப்பு
கன்னியாகுமரி:

வெள்ளிமலை பால சுப்பிரமணி சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள ஆலய முன்னேற்ற சங்க அலுவலகத்தை சுசீந்திரம் குமரிமாவட்ட இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகர், உதவி ஆணையர் கண்ண தாசன், ஆய்வாளர் செல்வி, கண்காணிப்பாளர் செந்தில்குமார், கோவில் ஸ்ரீகாரியம் சிவ பாஸ்கர், என்ஜினீயர் அய்யப்பன்,  குளச்சல் ஆர்.ஐ. முத்துபாண்டி, வெள்ளிமலை கிராம நிர்வாக அலுவலர் தமயந்தி, குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன், மண வாளக்குறிச்சி இன்ஸ் பெக்டர்   செந்தில் குமார் மற்றும் நூற்றுக்கணக்கான போலீசாருடன் சீல் வைத்தனர். 

தகவலறிந்து மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் தர்மராஜ், இந்து முன்னணி கோட்ட அமைப்பாளர் மிசா சோமன், ஆர்.எஸ்.எஸ். மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாநில பாரதிய ஜனதா செயலாளர் உமாரதி, முன்னாள் மாவட்ட தலைவர்கள் பொன் ரத்தினமணி, முத்துகிருஷ்ணன், துணைத் தலைவர் ரமேஷ், கோட்ட அமைப்பாளர் கிருஷ்ணன், கோட்ட அமைப்பு செயலாளர் கிருஷ்ணகுமார், பஞ்சாயத்து  தலைவர்கள் பாலசுப்ரமணியன், ராணிஜெயந்தி, கவுன் சிலர்கள், ஆலய முன்னேற சங்க கவுரவத் தலைவர் சிவசெல்வராஜன், தலைவர் சிவகுமார், செயலாளர் பத்மதாஸ் மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், பாரதிய ஜனதா நிர்வாகிகள் உறுப்பினர்கள், அனைத்து இந்து இயக்க பிரதிநிதிகள், பக்தர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அவர்களுடன் குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன் பேச்சுவார்த்தை நடத்தி னார். அதில் உடன்பாடு ஏற்படாதத்தை தொடர்ந்து   கல்குளம் தாசில்தார் வினோத் பேச்சுவார்த்தை நடத்தினார். அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் இந்து அறநிலை யத்துறை ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை மீட்கவும், மாற்று மதத்தினர் கைவசமுள்ள இடத்தை மீட்கவும் வேண்டி அரசு செயல்படாமல் பக்தர்களுக்கு சேவை செய்து வரும் ஆலய முன்னேற்ற சங்கத்தை முடக்கும் எண்ணத்தை கைவிடவும், இந்து அறநிலையத்துறைக்கு எந்த விதத்திலும் சொந்த மில்லாத சங்க அலு வலகத்தை சீல் வைத்த அறநிலையத்துறையை கண்டித்தும் நான் உண்ணா விரதம் இருக்கிறேன் எனக்கூறி மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் தர்மராஜ் அறிவித்து உண்ணாவிரதம் இருந்து வந்தார். 

இதற்கிடையே பேச்சு வார்த்தை உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து அங்கிருந்து புறப்பட இருந்த உதவி ஆணையரின் காரை பக்தர்கள், பிரச்சினைக்கு தீர்வு கண்டபின் இங்கிருந்து கிளம்பினால் போதுமென அவரது காரை சிறைபிடித்து வைத்தனர். மாலை ஆகியும் சுமூக முடிவு ஏற்படாத தால் ஆத்திரமடைந்த போராட்டக் காரர்கள்   கோவில் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். 

அப்போது அலுவல கத்திற்குள் இருந்த அதிகாரிகள் கதவை அடைத்தனர். உடனே ஆத்திரமடைந்த மக்கள் அலுவலக கதவை வெளியே பூட்டினர். அதை பார்த்துக் கொண்டிருந்த போலீசார் அதிகாரிகளை வெளியே கொண்டுவர அங்கு கூடி நின்றவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். இதில் போராட்ட காரர்களுக்கும் போலீ சாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் திருவிதாங்கோடு பேரூராட்சி கவுன்சிலர் மாளிகாவை பெண் போலீசார் பிடித்து அப்புறப்படுத்தியபோது மயங்கி கீழே விழுந்தார்.  உடனடியாக அங்கு நின்றவர்கள் அவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ. மாவட்ட தலைவர் தர்மராஜ் உட்பட நூற்றுக் கணக்கானோரை கைது செய்து வெள்ளிச்சந்தை அருகே ஈத்தங்காடு மண்ட பத்தில் கொண்டு சென்ற னர். இதில் பெண்கள் உட்பட 173 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட வர்கள் அங்குள்ள மண்ட பத்தில் தங்க வைக்கப் பட்டனர். பின்னர் இரவு 9 மணிக்கு அவர்கள் விடுவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடு பட்ட 173 பேர் மீதும் மண வாளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வெள்ளி மலையில் இன்று 2-வது நாளாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News