செய்திகள்

வேகப்பந்தை ‘டார்கெட்’ செய்யும் ஹர்திக் பாண்டியா: டெத் ஓவர்களில் அபாரம்

Published On 2019-04-19 12:44 GMT   |   Update On 2019-04-19 12:44 GMT
மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா வேகப்பந்து வீச்சை ‘டார்கெட்’ செய்து டெத் ஓவரில் அபாரமாக பேட்டிங் செய்து வருகிறார். #IPL2019
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. இவர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்த சீசனில் வேகப்பந்து வீச்சை குறிவைத்து அதிரடியாக விளையாடி வருகிறார். குறிப்பாக டெத் ஓவர்களான கடைசி நான்கு ஓவர்களில் ‘ஹெலிகாப்டர்’ ஷாட் மூலம் பந்தை ரசிகர்கள் அமர்ந்திருக்கும் கேலரிக்கு அனுப்புகிறார். இவரது அதிரடியால் மும்பை இந்தியன்ஸ் அணி இக்கட்டான நிலையில் இருந்து வெற்றிக்கான ரன்னைப் பெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ்.

கடந்த 2015-ல் இருந்து ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். முதலில் சுழற்பந்தைதான் துவம்சம் செய்து கொண்டிருந்தார். தற்போது வேகப்பந்துக்கு மாறியுள்ளார்.

2015-ல் வேகப்பந்து வீச்சில் 43 பந்தில் 75 ரன்களும், சுழற்பந்தில் 19 பந்தில் 37 ரன்களும் அடித்துள்ளார். 2016-ல் வேகப்பந்தில் 52 பந்தில் 34 ரன்களும், சுழற்பந்தில் 11 பந்தில் 10 ரன்களும் அடித்துள்ளார். 2017-ல் வேகப்பந்தில் 113 பந்தில் 202 ரன்களும், சுழற்பந்து வீச்சில் 47 பந்தில் 48 ரன்களும் அடித்துள்ளார்.



2018-ல் வேகப்பந்தில் 129 பந்தில் 185 ரன்களும், சுழற்பந்தில் 66 பந்தில் 75 ரன்களும் அடித்துள்ளார். தற்போது இந்த சீசனில் 91 வேகப்பந்தில் 177 ரன்களும், 21 சுழற்பந்தில் 41 ரன்களும் அடித்துள்ளார். ஸ்டிரைக் ரேட் வேகப்பந்தில் 194.5 ஆகும்.

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்க சரியான வீரர்கள் இல்லை என்று கூறும் நிலையில், ஹர்திக் பாண்டியாவின் பார்ம் இந்தியாவுக்கு உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News