செய்திகள்
கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த தொழிலாளர்களை படத்தில் காணலாம்.

தீபாவளி போனஸ் வழங்க வேண்டும்- கலெக்டரிடம் தொழிலாளர்கள் மனு

Published On 2019-10-25 15:12 GMT   |   Update On 2019-10-25 15:12 GMT
தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் தனியார் மின் உற்பத்தி தொழிலாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
நாகப்பட்டினம்:

நாகூர் அருகே ஒக்கூரில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் முன்பணம் உடனே வழங்கக்கோரி சி.ஐ.டி.யூ தொழிற்சங்கம் மற்றும் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் 2 நாட்கள் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து கீழ்வேளூர் தாசில்தார் மற்றும் நாகூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதையடுத்து நாங்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்த முயற்சி செய்தோம். அப்போது போலீசார் கேட்டு கொண்டதன் பேரில் உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. ஆனால் இதுவரை போனஸ் தொடர்பாக எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. எனவே கலெக்டர் தலையிட்டு தீபாவளி போனஸ் உள்ளிட்ட சலுகைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குத்தாலம் முன்னாள் எம்.எல்.ஏ. கல்யாணம் தலைமையில் கலெக்டர் பிரவீன் நாயரை சந்தித்து நேற்று பொதுமக்கள் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நாகை மாவட்டத்திற்கு அரசு அறிவித்துள்ள மருத்துவக்கல்லூரி ஒரத்தூரில் அமைய மாவட்ட நிர்வாகம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தெரிகிறது. நோயாளிகள் மிக குறைந்த தூரத்திலும், குறைந்த நேரத்திலும் மருத்துவ வசதி பெறும் நோக்கோடு கொண்டு வரப்பட்ட நல்ல திட்டமாகும். எனவே மயிலாடுதுறை பகுதியில் மருத்துவக்கல்லூரி அமைய பரிந்துரை செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News