ஆன்மிகம்
செட்டிச்சாவடி ராஜகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

செட்டிச்சாவடி ராஜகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2021-02-15 04:03 GMT   |   Update On 2021-02-15 04:03 GMT
சேலம் கோரிமேடு அடுத்த செட்டிச்சாவடி பகுதியில் ராஜகாளியம்மன் கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்து இன்று (திங்கட்கிழமை) காலையில் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.
சேலம் கோரிமேடு அடுத்த செட்டிச்சாவடி பகுதியில் ராஜகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்து இன்று (திங்கட்கிழமை) காலையில் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று காலை மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். மேள தாளங்கள் முழங்கவும், வாண வேடிக்கையுடன் செட்டிச்சாவடி, விநாயகம்பட்டி, நெல்லியா கரடு ஆகிய கிராமங்கள் வழியாக தீர்த்தக்குட ஊர்வலம் சம்போடையில் உள்ள கோவிலுக்கு வந்தடைந்தது. இதையடுத்து சிறப்பு பூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News