செய்திகள்
அமித் பங்கல்

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறி அமித் பங்கல் சாதனை

Published On 2019-09-20 12:12 GMT   |   Update On 2019-09-20 12:12 GMT
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அமித் பங்கல் பெற்றுள்ளார்.
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இதில் 52 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் அமித் பங்கல் கலந்து கொண்டார்.

இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் அமித் பங்கல் கஜகஸ்தானைச் சேர்ந்த சாகேன் பிபோசிநவ்-ஐ எதிர்கொண்டார். இதில் 3-2 என பங்கல் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இதன்மூலம் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். பங்கல் இறுதிப் போட்டியில் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த ஷகோபிடின் ஜொய்ரோவ்-ஐ எதிர்கொள்கிறார்.

மற்றொரு இந்திய வீரரான கவுசிக் அரையிறுதியில் தோல்வியடைந்து வெண்கல பதக்கம் வென்றார்.

இதற்கு முன் விஜேந்தர் சிங் (2009), விகாஸ் கிஷன் (2011), ஷிவ தபா (2015), கவுரவ் பிதுரி (2017) ஆகியோர் வெண்கல பதக்கம் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News