செய்திகள்
ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ தனியார் வங்கியை கையகப்படுத்துவதாக வைரலாகும் தகவல்

Published On 2021-09-17 05:26 GMT   |   Update On 2021-09-17 05:26 GMT
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனியார் வங்கியை கையகப்படுத்த இருப்பதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பெடரல் வங்கியை சுமார் ஆயிரம் கோடி டாலர்கள் கொடுத்து கையகப்படுத்த இருப்பதாக கூறும் செய்தி குறிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வங்கிய கையகப்படுத்தி வங்கி துறையில் ஜியோ களமிறங்க இருக்கிறது என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

தற்போது ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பெடரல் வங்கி, வைரல் பதிவுகளில் உண்மையில்லை என தெரிவித்துள்ளன. வங்கியை கையகப்படுத்துவது குறித்து எந்த தகவலையும் இதுவரை வெளியிடவிலலை என ஜியோ தனியார் நிறுவனத்திடம் தெரிவித்து இருக்கிறது.



வங்கிகள் ஒழுங்குமுறை சட்டம் 1949-படி மத்திய ரிசர்வ் வங்கி கார்ப்பரேட் அல்லது தொழில்துறை நிறுவனங்கள் வங்கியை துவங்க அனுமதிக்காது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் வங்கிகளை துவங்குவதற்கான விதிமுறைகளில் ரிசர்வ் வங்கி குழு பல்வேறு மாற்றங்களை செய்தது. அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ பெடரல் வங்கியை கையகப்படுத்துவதாக வைரலான தகவல் பொய் என உறுதியாகிவிட்டது.

Tags:    

Similar News