ஆட்டோமொபைல்
டொயோட்டா கார்

ஜனவரி மாத விற்பனையில் அசத்திய டொயோட்டா

Published On 2021-02-01 06:39 GMT   |   Update On 2021-02-01 06:39 GMT
2021 ஜனவரி மாதத்திற்கான டொயோட்டா நிறுவனத்தின் வாகன விற்பனை விவரம் வெளியாகி உள்ளது.


டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் 2021 ஜனவரி மாதத்தில் 11,126 யூனிட்களை விற்பனை செய்து உள்ளது. இது கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும் போது 92 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த ஆண்டு ஜனவரியில் டொயோட்டா நிறுவனம் 5,804 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது.

டொயோட்டா மற்றும் சுசுகி நிறுவனங்கள் இடையேயான ஒப்பந்தம் காரணமாக ஒட்டுமொத்த விற்பனை 50 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. இருநிறுவனங்கள் கூட்டணியில் வெளியான முதல் மாடல் டொயோட்டா கிளான்ஸா மாருதியின் பலேனோ ஹேட்ச்பேக் மாடலை தழுவி உருவானது. 



இதைத் தொடர்ந்து அர்பன் குரூயிசர் காம்பேக்ட் எஸ்யுவி மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் 2020 செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இரு மாடல்களும் டொயோட்டா நிறுவனம் புது பிரிவுகளில் களமிறங்க உதவியாக அமைந்தன. 

இதுதவிர டொயோட்டா நிறுவனம் இன்னோவா க்ரிஸ்டா மற்றும் பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மாடல்களை அறிமுகம் செய்து இருந்தது.
Tags:    

Similar News