ஆட்டோமொபைல்
கியா கார்

விற்பனையில் இரண்டு லட்சம் கார்களை கடந்த கியா மோட்டார்ஸ்

Published On 2021-01-30 09:22 GMT   |   Update On 2021-01-30 09:22 GMT
கியா மோட்டார்ஸ் இந்தியா 17 மாதங்களில் இரண்டு லட்சம் கார்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.


கியா கார்ப்பரேஷனின் துணை நிறுவனமான கியா மோட்டார்ஸ் இந்தியா, கார் உற்பத்தியில் இரண்டு லட்சம் யூனிட்களை கடந்துள்ளது. 2020 ஜூலை மாதத்தில் ஒரு லட்சம் யூனிட்டுகள் என்னும் கார் விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்த பிறகு, அடுத்த 6 மாத காலத்திற்குள் 2 லட்சம் கார்கள் விற்பனை என்ற சாதனையை எட்டியுள்ளது.

செல்டோஸ், சொனெட் மற்றும் கார்னிவல் ஆகியவற்றின் உற்பத்தியாளரான இந்நிறுவனம், நாட்டில் விற்பனை நடவடிக்கைகள் தொடங்கி 17 மாதங்களுக்குள் 2 லட்சம் கியா வாகனங்களை இந்தியா முழுவதும் அதன் டீலர்ஷிப்களுக்கு வெற்றிகரமாக அனுப்பி உள்ளது.



டாப்-எண்ட் வேரியண்ட்கள், அதாவது செல்டோஸ் மற்றும் சொனெட்டு மாடல்களின் ஜிடிஎக்ஸ் மற்றும் கார்னிவல் லிமோசின் வேரியண்ட் ஆகியவை மொத்த கார்களில் 60 சதவீதம் விற்பனைக்கு பங்களித்துள்ளன. கியா இந்திய ஆட்டோமொபைல் துறையில் முதல் 5 வாகன உற்பத்தியாளர்கள் பட்டியலில் இடம்பெற்று வருகிறது. 

விற்பனை பட்டியலில் செல்டோஸ் 149,428 யூனிட்டுகளுடன், 2020 செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட்ட சொனெட் 45,195 யூனிட்களும், கார்னிவல் மொத்தம் 5409 யூனிட்களும் விற்பனையாகி உள்ளன.
Tags:    

Similar News