ஆட்டோமொபைல்
மாருதி சுசுகி ஜிம்னி

மாருதி சுசுகி ஜிம்னி ஏற்றுமதி துவக்கம்

Published On 2021-01-21 11:03 GMT   |   Update On 2021-01-21 11:03 GMT
மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய ஜிம்னி மாடல் ஏற்றுமதி இந்தியாவில் இருந்து துவங்கி இருக்கிறது.


மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் தனது ஜிம்னி மாடலின் ஏற்றுமதி துவங்கி உள்ளதாக அறிவித்து இருக்கிறது. முதற்கட்ட யூனிட்கள் இந்தியாவில் உற்பத்தி செய்து லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அசத்தலான வடிவமைப்பு மற்றும் ரக்கட் ஆப்-ரோடு அம்சங்களால் சுசுகி ஜிம்னி மாடல் அதிக பிரபலமானது. தற்சமயம் இந்த மாடல் உலகின் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு உலகளவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.



தற்சமயம் 184 சுசுகி ஜிம்னி யூனிட்கள் குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் இருந்து கிளம்பியுள்ளது. இவை லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்கா சந்தைகளுக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட இருக்கின்றன.

சுசுகி ஜிம்னி ஆப்-ரோடு எஸ்யுவி மாடலில் 1.5 லிட்டர் கே சீரிஸ் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 103.2 பிஹெச்பி பவர், 138 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
Tags:    

Similar News