செய்திகள்
தற்கொலை

மழை வெள்ளத்தில் நெற்பயிர் மூழ்கியதால் விவசாயி தற்கொலை

Published On 2021-11-23 05:24 GMT   |   Update On 2021-11-23 05:24 GMT
விழுப்புரம் அருகே மழை வெள்ளத்தில் நெற்பயிர் மூழ்கியதால் விவசாயி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வானூர்:

விழுப்புரம் அருகே கிளியனூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட கோவடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 46) விவசாயி. இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நெற்பயிர் சாகுபடி செய்திருந்தார்.

கடந்த சில தினங்களாக இந்த பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வந்தது. இந்த தொடர் மழையின் காரணமாக விவசாய நிலங்களில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியது. தொடர்ந்து விவசாயிகள் பயிரிட்டு இருந்த நெற்பயிர்கள் முழுவதும் மழை வெள்ளத்தில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டது.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட பாஸ்கரன் சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தூக்கில் பிணமாக தொங்கிய பாஸ்கரனை பார்த்து அவரது மனைவி செல்வி கதறி அழுதார்.

இதுகுறித்து கிளியனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் பாஸ்கரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News