தொழில்நுட்பம்
மேக் மினி

மிகவும் சக்திவாய்ந்த மேக் மினி மாடலை அறிமுகம் செய்த ஆப்பிள்

Published On 2020-11-10 18:55 GMT   |   Update On 2020-11-10 18:55 GMT
ஆப்பிள் நிறுவனம் இதுவரை வெளியானதில் மிகவும் சக்திவாய்ந்த மேக் மினி மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் சக்திவாய்ந்த மேக் மினி மாடல் ஆப்பிள்  One More Thing நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட மேக்புக் ஏர் போன்றே மேக் மினி மாடலிலும் ஆப்பிள் நிறுவனத்தின் அதிநவீன எம்1 சிப் வழங்கப்பட்டு இருக்கிறது. 

புதிய அதிநவீன எம்1 5நானோமீட்டர் முறையில் உருவான முதல் கம்ப்யூட்டிங் சிப் ஆகும். இதில் 16 மில்லியன் டிரான்சிஸ்டர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இது உலகின் அதிவேக கோர் ஆகும். இதில் 8 கோர் சிபியு மற்றும் 8 கோர் ஜிபியு வழங்கப்பட்டு உள்ளது. 



மேக் மினி மாடலில் 3 மடங்கு வேகமான சிபியு, 8 கோர் ஜிபியு வழங்கப்பட்டு இருக்கிறது. இது முன்பை விட ஆறு மடங்கு வேகமான கிராபிக்ஸ் அனுபவத்தை வழங்கும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் நியூரல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. 

கனெக்டிவிட்டியை பொருத்தவரை புதிய மேக் மினி மாடலில் ஈத்தர்நெட், யுஎஸ்பி 4 / தண்டர்போல்ட், ஹெச்டிஎம்ஐ 2.0, யுஎஸ்பி ஏ, ப்ரோ டிஸ்ப்ளே எக்ஸ்டிஆர் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. புதிய மேக் மினி மாடல் விலை 699 டாலர்கள் முதல் துவங்குகிறது.
Tags:    

Similar News