ஆன்மிகம்
தஞ்சை பெரியகோவிலில் சமூக இடைவெளியை மறந்து குவிந்த பக்தர்கள்

தஞ்சை பெரியகோவிலில் சமூக இடைவெளியை மறந்து குவிந்த பக்தர்கள்

Published On 2020-10-05 05:27 GMT   |   Update On 2020-10-05 05:27 GMT
தஞ்சை பெரியகோவிலில் சமூக இடைவெளியை மறந்து பக்தர்கள் குவிந்தனர். தஞ்சை மாவட்டத்தில் தொற்று அதிகரித்து வரும் நிலையில் மக்களிடம் அச்ச உணர்வு இல்லாத நிலை காணப்பட்டது.
தஞ்சை பெரிய கோவிலுக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். 23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரியகோவிலில் கடந்த பிப்ரவரி மாதம் 5-ந் தேதி குடமுழுக்கு விழா நடைபெற்றது. அதன் பின்னர் நாளுக்கு நாள் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பெரியகோவில் கடந்த மார்ச் மாதம் 18-ந் தேதி மூடப்பட்டது. ஆனால் தினமும் நான்கு வேளை பூஜைகள் நடைபெற்றன. பிரதோஷ வழிபாடும் பக்தர்கள் இன்றி நடந்து வந்தது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் கொரோனா ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்ததையடுத்து கடந்த மாதம் 1-ந் தேதி சில தளர்வுகளுடன் பெரியகோவில் திறக்கப்பட்டது.

கோவில் உள்ளே பெரியவர்கள் குழந்தைகள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. குறைந்த அளவிலான பக்தர்களே வந்து கொண்டிருந்தனர். மேலும் முக கவசம் அணியாமல் வருபவர்கள் அனுமதிக்கப்படவில்லை. சமூக இடைவெளியும் கடைபிடிக்கப்பட்டது. கோவிலின் முன்புறம் பக்தர்கள் அனைவருக்கும் கிருமிநாசினியும் கைகளில் தெளிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று அதிக அளவிலான பக்தர்கள் பெரியகோவிலில் குவிந்தனர். மாலை 4 மணிக்கு நடைதிறக்கும் என்பதால் ஏராளமான பக்தர்கள் கோவிலின் முன்பு திரண்டு இருந்தனர். கொரோனா அச்சம் சிறிதளவு கூட இல்லாமல் அதைப்பற்றி கண்டுகொள்ளாமல் பக்தர்கள் சமூக இடைவெளி இன்றி நீண்ட வரிசையில் காத்துக்கொண்டிருந்து கோவிலுக்குள் சென்றனர். தமிழக அரசு எவ்வளவுதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பொதுமக்கள் கொரோனா பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் இருப்பது மேலும் கொரோனா பரவல் அதிகமாக வாய்ப்புள்ளது.
Tags:    

Similar News