இந்தியா
பாராளுமன்றம்

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் - அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு

Published On 2022-01-21 10:36 GMT   |   Update On 2022-01-21 10:36 GMT
இந்த ஆண்டின் முதலாவது பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி முடிவடைகிறது.
புதுடெல்லி:

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31-ம் தேதி தொடங்குகிறது. இது இந்த ஆண்டின் முதலாவது கூட்டத்தொடர் ஆகும். பிப்ரவரி 1-ம் தேதி இந்த நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசுகிறார். பொது பட்ஜெட்டிலேயே ரெயில்வே பட்ஜெட்டும் அடங்கி இருக்கும். 
 
பட்ஜெட் கூட்டதொடர் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக ஜனவரி 31 முதல் பிப்ரவரி 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாம் கட்டமாக மார்ச் 14 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வரும் 31-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை ஆக்கப்பூர்வமாகவும் பயனுள்ளதாகவும் நடத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.

Tags:    

Similar News