தொழில்நுட்பம்
சுந்தர் பிச்சை

ஜியோபோன் நெக்ஸ்ட் இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்திய சுந்தர் பிச்சை

Published On 2021-10-27 08:52 GMT   |   Update On 2021-10-27 08:55 GMT
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஜியோபோன் நெக்ஸ்ட் வெளியீட்டு விவரங்களை அறிவித்தார்.


கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் தீபாவளி தினத்தில் வெளியாகும் என அறிவித்தார். இந்த ஸ்மார்ட்போன் ரிலையன்ஸ் மற்றும் கூகுள் நிறுவனங்கள் கூட்டணியில் உருவாகி இருக்கிறது. 

ஆண்டு வருவாய் கூட்டத்தில் இதுபற்றி பேசிய சுந்தர் பிச்சை, ஜியோபோன் நெக்ஸ்ட் ஆங்கிலம் மட்டுமின்றி இந்திய மக்களுக்கான சாதனமாக இருக்கும் என தெரிவித்தார். பீச்சர் போன் பயனர்களை பெருமளவு ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த வைக்க ஜியோபோன் நெக்ஸ்ட் பாலமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.



இந்தியாவில் டிஜிட்டல் புரட்சிக்கான அடித்தளமாக ஜியோபோன் நெக்ஸ்ட் இருக்கும். சந்தையில் மிகவும் போட்டியை ஏற்படுத்தும் விலையில் உருவாகி இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னதாக ஜியோபோன் நெக்ஸ்ட் மாடலுக்கான புது டீசர் வெளியிடப்பட்டது. இதில் ஜியோபோன் நெக்ஸ்ட் ஆண்ட்ராய்டு சார்ந்து உருவாகி இருக்கும் பிரகதி ஓ.எஸ். கொண்டு இயங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் பிராசஸர், வாய்ஸ் அசிஸ்டண்ட் என பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கிறது.
Tags:    

Similar News