செய்திகள்
கோப்புபடம்

திருச்சி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,412 மது பாட்டில்கள் பறிமுதல் - டிரைவர் உள்பட 2 பேர் கைது

Published On 2021-04-04 07:17 GMT   |   Update On 2021-04-04 07:17 GMT
திருச்சி அருகே வாக்காளர்களுக்கு சப்ளை செய்ய வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,412 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி:

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் (6-ந்தேதி) நடக்கிறது. அமைதியான முறையில் வாக்குப்பதிவை நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைக ளையும் தேர்தல் ஆணையம் முழுமையாக எடுத்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் டாஸ் மாக் கடைகள் இன்று முதல் 3 நாட்களுக்கு அடைக்கப் படும் என்று அரசு அறிவித் துள்ளது. இதனால் நேற்று மது பிரியர்கள் தங்களுக்கு தேவையான மது பானங் களை அதிக அளவில் வாங்கி சென்றனர். இதனால் விற்பனை பன்மடங்கு அதிக ரித்தது.

இந்த நிலையில் திருச்சி சிறுகனூர் அருகே உள்ள ஊட்டத்தூர் தெரணிபாளை யம் பகுதியில் ஒரு சிலர் மது பாட்டில்களை தேர்தலின் போது வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதற்காக மற்றும் அதிக விலைக்கு விற் பனை செய்வதற்காகவும் பதுக்கி வைத்திருப்பதாக திருச்சி சிறுகனுர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப் படையில் இன்ஸ்பெக்டர் சுமதி தலை மையிலான போலீசார் ஊட் டத்தூர் அருகே உள்ள தெர ணிபாளையம் பகுதிக்கு உட னடியாக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு சென்ற னர். அப்போது அங்கு பல் வேறு பகுதிகளில் சோதனை கள் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன் (வயது 41) என்பவரது வீட்டில் மதுபாட் டில் இருப்பது போன்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

பின்னர் உடனடியாக அவரது வீட்டிற்குள் சென்று சோதனை செய்தனர். அப் போது சுமார் 1,412 மது பாட்டில்களை பதுக்கி வைக் கப்பட்டிருந்தது போலீசா ருக்கு தெரியவந்தது. அப் போது ரங்கநாதன் தப்பி ஓட முயன்றுள்ளார். போலீ சார் அவரை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர்.

இதில் அதே பகுதியைச் சேர்ந்த டிரைவராக வேலை செய்து வரும் மணிகண்டன் (28) என்பவருக்கும் இதில் சம்பந்தம் இருப்பது போலீ சார் விசாரணையில் அம்ப லமானது. பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து சிறுகனூர் போலீசார் மது பாட்டில்களை சட்ட விரோதமாக வீட்டில் பதுக்கி வைத்திருந்ததற்காக ரங்கநா தன் மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்த னர். 

Tags:    

Similar News