ஆன்மிகம்
புள்ளம்பாடியில் மாரியம்மன்

புள்ளம்பாடியில் மாரியம்மன் கோவில் திருவிழா

Published On 2020-12-04 04:43 GMT   |   Update On 2020-12-04 04:43 GMT
திருச்சி மாவட்டம், புள்ளம்பாடியில் சிதம்பரேஸ்வரர் கோவில் வகையறாவின் மகா மாரியம்மன் கோவிலின் ஆண்டு திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
திருச்சி மாவட்டம், புள்ளம்பாடியில் சிதம்பரேஸ்வரர் கோவில் வகையறாவின் மகா மாரியம்மன் கோவிலின் ஆண்டு திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. பின்னர், கார்த்திகை மாதம் முதல் ஞாயிறு அன்று மறுகாப்பு கட்டுதல், அடுத்த ஞாயிற்றுக்கிழமை ஏரி கரையில் இருந்து பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும், பிள்ளை தொட்டி கட்டியும் மற்றும் பால்குடம் எடுத்தும் பக்தர்கள் கோவிலை வந்தடைந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். 

அதனைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மாலை அம்மனுக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. திருவிழாவையொட்டி புள்ளம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன் தலைமையில் ஊழியர்கள் தூய்மை பணியும், ஆங்காங்கே நீர்மோறும் வழங்கினார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரி மனோகரன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News