செய்திகள்
மம்தா பானர்ஜி

நந்திகிராமில் 6 சுற்றுகளுக்கு பிறகு முன்னிலை பெற்ற மம்தா -தொண்டர்கள் ஆரவாரம்

Published On 2021-05-02 08:52 GMT   |   Update On 2021-05-02 08:52 GMT
மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது.
கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவியது.

முதல்வர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அவரது முன்னாள் உதவியாளர் சுவேந்து அதிகாரி பாஜக சார்பில் களமிறங்கினார். இதனால் நந்திகிராம் தேர்தல் களம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. இதில் வெற்றி பெறுவது மம்தா பானர்ஜிக்கு கவுரவ பிரச்சனையாக கருதப்பட்டது.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில், மம்தா பானர்ஜி பின்னடைவை சந்தித்தார். சுவேந்து அதிகாரி முன்னிலையில் இருந்தார். தொடர்ந்து மம்தா பின்தங்கியதால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், 6 சுற்றுகள் வரை பின்தங்கிய மம்தா, 7வது சுற்றில் அதிக வாக்குகள் வாங்கினார். அந்த சுற்றின் முடிவில்  2700 வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா முன்னிலை பெற்றதால் தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். 

அதேசமயம், ஒட்டுமொத்த முன்னிலை நிலவரத்தை பொருத்தவரை, திரிணாமுல் காங்கிரஸ் மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. இதனால் மீண்டும் ஆட்சியமைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
Tags:    

Similar News