லைஃப்ஸ்டைல்
சோயா பீன்ஸ் அடை

கெட்ட கொழுப்பை கரைக்கும் சோயா பீன்ஸ் அடை

Published On 2019-09-13 04:31 GMT   |   Update On 2019-09-13 04:31 GMT
உடலில் உள்ள கெட்ட கொழுப்பை விரட்ட உதவுகிறது சோயா பீன்ஸ். இன்று இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பச்சரிசி, இட்லி அரிசி - தலா 1 கப்,   
கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, காய்ந்த சோயா பயறு - தலா அரை கப்,   
பாசிப்பருப்பு  - 3 டேபிள்ஸ்பூன்,   
காய்ந்த மிளகாய் - 7,   
பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன்,   
தேங்காய்த் துருவல் - கால் கப்,  
கறிவேப்பிலை - சிறிதளவு,   
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை:

அரிசி, பருப்பு, சோயா பயறு வகைகளுடன் நன்றாக கழுவி 3 மணி நேரம் ஊறவைக்கவும்.

பிறகு களைந்து தண்ணீரை வடிகட்டி அதனுடன் காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்தெடுத்து கொள்ளவும்.

அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலக்கவும்.

தோசைக்கல்லைக் காயவைத்து மாவை அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

சத்தான சுவையான சோயா பீன்ஸ் அடை

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News