செய்திகள்
எலக்ட்ரிக் பஸ்கள்

சேலத்தில் முக்கிய வழித்தடங்களில் விரைவில் 50 எலக்ட்ரிக் பஸ்கள் இயக்கம்

Published On 2019-10-08 04:45 GMT   |   Update On 2019-10-08 04:45 GMT
சேலத்தில் முக்கிய வழித்தடங்களில் விரைவில் 50 எலக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. பஸ்கள் வருகிற டிசம்பர் மாதம் 1-ந்தேதிக்குள் முழுமையாக இயக்கத்துக்கு வர உள்ளன.
சேலம்:

மத்திய அரசின் நிதி உதவியில் சேலத்தில் 50 எலக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக பஸ் ஒன்றுக்கு 55 லட்சம் ரூபாயை மத்திய அரசு வழங்குகிறது. நிதி முழுவதையும் மத்திய அரசே வழங்குகிறது. பஸ்கள் வருகிற டிசம்பர் மாதம் 1-ந்தேதிக்குள் முழுமையாக இயக்கத்துக்கு வர உள்ளன.

சேலத்தில் இயக்கப்பட உள்ள பஸ்களுக்கான வழித்தடங்களை தமிழக போக்குவரத்து துறை, மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது. வழித்தடங்களின் விபரம் வருமாறு:-

சேலம் பழைய பஸ் நிலையம் - புதிய பஸ் நிலையம் வழியாக ஜங்சன் தடம் எண்.13-ல் 10 பஸ்கள், பழைய பஸ் நிலையம் - அஸ்தம்பட்டி வழியாக ஜங்சன் தடம் எண். 7-ல் 3 பஸ்கள், பழைய பஸ் நிலையம்- ஏற்காடு அடிவாரம் தடம் எண். 56-ல் 3 பஸ்கள், பழைய பஸ் நிலையம்- கன்னங்குறிச்சி தடம் எண்.5-ல் 3 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இதைத்தவிர பழைய பஸ் நிலையத்தில் இருந்து, புதிய பஸ் நிலையம் வழியாக தாரமங்கலம் வரை தடம் எண்.6-ல் 5 பஸ்கள், பழைய பஸ் நிலையம்- மகுடஞ்சாவடி தடம் எண். 30-ல் 3 பஸ்கள், பழைய பஸ் நிலையம்- வாழப்பாடி தடம் எண். 74-ல் 5 பஸ்கள், பழைய பஸ் நிலையம்- ராசிபுரம் தடம் எண் 52-ல் 5 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

பழைய பஸ் நிலையம்- ஓமலூர் தடம் எண்.13-ல் 5 பஸ்கள், பழைய பஸ் நிலையம்- ஜங்சன் தடம் எண். 13டி-ல் 2 பஸ்கள், பழைய பஸ் நிலையம்- ஜங்சன் தடம் எண் 13சி-ல் 2 பஸ்கள், புதிய பஸ் நிலையம்- அடிவாரம் தடம் எண். 3சி-ல் 2 பஸ்கள், புதிய பஸ் நிலையம்- கன்னங்குறிச்சி தடம் எண். 5சி-ல் 2 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்த பஸ்களுக்கான சார்ஜிங் பாயின்டுகள் பள்ளப்பட்டி, எருமாபாளையம்-2 கிளைகளில் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News