செய்திகள்
கொரோனா தடுப்பூசி

நாமக்கல் மாவட்டத்தில் 5-வது கட்டமாக 85 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு

Published On 2021-10-08 08:30 GMT   |   Update On 2021-10-08 08:30 GMT
நாமக்கல் மாவட்டத்தில் 5-வது கட்டமாக நாளை மறுநாள் நடைபெறும் சிறப்பு முகாமில் 85 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி 5-வது கட்ட சிறப்பு முகாம் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடந்தது.

தமிழக முதல்-அமைச்சர் கொரோனா தடுப்பூசி அனைவரும் போட்டுக்கொள்ளும் வகையில் மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாம்களை மாவட்டந்தோறும் நடத்த உத்தரவிட்டு உள்ளார்.

அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் முதல் கட்டமாக நடைபெற்ற சிறப்பு முகாமில் 85,325 பேரும், 2-வது கட்டமாக நடந்த சிறப்பு முகாமில் 31,448 பேரும், 3-வது கட்டமாக நடந்த முகாமில் 59,753 பேரும், 4-வது கட்டமாக நடந்த முகாமில் 33,953 பேரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.

5-வது கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நாளை மறுநாள் நடக்கிறது. இந்த முகாமில் 85 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனவே அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், இணை இயக்குனர் (மருத்துவப்பணிகள்) ராஜ்மோகன், துணை இயக்குனர் (சுகாதாரம்) பிரபாகரன், உதவி கலெக்டர்கள் மஞ்சுளா, இளவரசி, தனி தாசில்தார் (பேரிடர் மேலாண்மை) பச்சைமுத்து, நகராட்சி ஆணையாளர்கள், தாசில்தார்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News