செய்திகள்
கோப்புபடம்

வாடகை பணம் வழங்காததால் தவிக்கும் டிரைவர்கள்

Published On 2021-09-13 10:01 GMT   |   Update On 2021-09-13 10:01 GMT
கொரோனா இரண்டாம் பரவலின் காரணமாக சுற்றுலாவாகனங்கள் இயக்கம் முற்றிலும் தடைபட்டு உள்ளது.
திருப்பூர்;

தேர்தலுக்கு இயக்கிய வாகனங்களுக்கான வாடகையை உடனே வழங்க வேண்டுமென திருப்பூர் மாவட்ட சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர். 

இதுகுறித்து அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் - 2021 தேர்தல் பணிக்காக ஒப்பந்த அடிப்படையில் 350க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் இயக்கப்பட்டது.

ஆனால் தேர்தல் முடிந்து பல நாட்கள் ஆகியும் அந்த வாகனங்களுக்கு உண்டான வாடகைத்தொகை இந்த நாள் வரை வழங்கப்படாமல் உள்ளது. தாலுகா அலுவலங்களிலும் மற்றும் தேர்தல் பிரிவில் கோரிக்கை விடுத்தும் எங்களது தேர்தல் பணிக்காக இயங்கிய வாகனங்களுக்கான தொகை கிடைக்கப்பெறவில்லை.

கொரோனா இரண்டாம் பரவலின் காரணமாக எங்களது சுற்றுலா வாகனங்கள் இயக்கம் முற்றிலும் தடைபட்டு எங்களதுவாழ்வாதாரத்தை இழக்கும் நிலையில் உள்ளோம். தேர்தல் நடந்து 3 மாதங்கள் நிறைவு பெற்றும் இதுவரைஅதற்குண்டான தொகை எங்களுக்கு வந்து சேராமல் உள்ளது.

வாகன பராமரிப்பு மற்றும் எங்களது குடும்பத்தை கவனிக்க போதிய நிதி இல்லாமல் மிகவும் சிரமத்தில் நாட்களை நகர்த்திக்கொண்டு உள்ளோம். அரசின் கவனத்திற்கு எடுத்துச்சென்று விரைவில் தேர்தல் பணிக்கு இயக்கிய ஒப்பந்த வாகனங்களுக்கான வாடகை தொகையை பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News