ஆன்மிகம்
பொக்கிச மாகாளியம்மன் கோவில் திருவிழா

பொக்கிச மாகாளியம்மன் கோவில் திருவிழா

Published On 2021-08-18 07:42 GMT   |   Update On 2021-08-18 07:42 GMT
திருப்பத்தூர் மேலரத வீதியில் உள்ள பொக்கிச மாகாளியம்மன் கோவிலில் ஆடி திருவிழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
திருப்பத்தூர் மேலரத வீதியில் உள்ள பொக்கிச மாகாளியம்மன் கோவிலில் கடந்த 10-ந்தேதி காப்பு கட்டுதலுடன் ஆடி திருவிழா தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தமிழக அரசின் வழிக்காட்டுதலின் பேரில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. முனீஸ்வரர் வெள்ளி அங்கி அணிவித்தும், காளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகிக்கப்பட்டது.
Tags:    

Similar News