ஆன்மிகம்
எள், ஏலக்காய், மற்றும் ருத்ராட்சம் ஆகியவைகளால் தயாரிக்கப்பட்ட மாலை மற்றும் கிரீடம் ஆகியவைகளை படத்தில் காணலாம்

திருநள்ளாறு கோவிலுக்கு ஏலக்காய் மாலை அவினாசியில் இருந்து கொண்டு செல்லப்படுகிறது

Published On 2020-12-24 05:36 GMT   |   Update On 2020-12-24 05:36 GMT
சனிப்பெயர்ச்சியையொட்டி திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு அவினாசியில் இருந்து ஏலக்காய் மாலை கொண்டு செல்லப்படுகிறது.
வருகிற 27-ந்தேதி அதிகாலையில் உத்ராடம் நட்சத்திரம் 2-ம் பாகத்தில் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சியாகிறார்.

சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு திருப்பூர் மாவட்டம் அவினாசியிலிருந்து எள், ஏலக்காய், மற்றும் ருத்ராட்சம் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட ஏலக்காய் மாலைகள் செய்யப்பட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.

இது குறித்து அவினாசியை சேர்ந்த மலர் நிலைய உரிமையாளர் கூறியதாவது:-

வருகிற 27-ந்தேதி தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சியாகிறார். இதனையொட்டி திருநள்ளாறு கோவிலுக்கு எங்கள் மலர் நிலையத்தின் சார்பில் கடந்த 4 நாட்களாக சனி பகவானுக்கு உகந்த எள், ஏலக்காய், மற்றும் ருத்ராட்சங்கள் ஆகியவற்றால் மாலை மற்றும் மாலையுடன் கூடிய கிரீடம் ஆகியவை நேர்த்தியான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மாலைகள் அவினாசியில் உள்ள அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் உள்ள அர்ச்சகர்கள் மூலம் திருநள்ளாறில் உள்ள சனீஸ்வர பகவான கோவிலுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News