தொழில்நுட்பம்
இன்பினிக்ஸ் X1 40-இன்ச் FHD ஸ்மார்ட் டிவி

ரூ. 19,999 விலையில் 40-இன்ச் FHD ஸ்மார்ட் டிவி அறிமுகம்

Published On 2021-07-30 10:28 GMT   |   Update On 2021-07-30 10:28 GMT
இன்பினிக்ஸ் புதிய 40-இன்ச் FHD ஸ்மார்ட் டிவி மாடலில் 24 வாட் பாக்ஸ் ஸ்பீக்கர் மற்றும் டால்பி ஆடியோ தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது.


இன்பினிக்ஸ் நிறுவனம் X1 சீரிசில் 40 இன்ச் FHD  ஸ்மார்ட் டிவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. முன்னதாக X2 சீரிசில் 32 இன்ச் HD மற்றும் 43 இன்ச் FHD வேரியண்ட்களை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகம் செய்தது. 

புதிய FHD ஸ்மார்ட் டிவி மாடலில் மெல்லிய பெசல்கள், அதிக ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ, மெல்லிய டிசைன், இன்பினிக்ஸ் எபிக் 2.0 பிக்ச்சர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது டிவியின் ஒட்டுமொத்த பிக்ச்சர் தரத்தை மேம்படுத்தி தலைசிறந்த அனுபவத்தை வழங்குகிறது.



இன்பினிக்ஸ் X1 40 இன்ச் அம்சங்கள்

- 40 இன்ச் 1920x1080 பிக்சல் FHD டிஸ்ப்ளே
- இனிபினிக்ஸ் EPIC 2.0 பிக்ச்சர் என்ஜின், லோ புளூ லைட் எமிஷன்
- குவாட்கோர் மீடியாடெக் 6683 பிராசஸர்
- மாலி 470 MP3 GPU
- 1 ஜிபி DDR4 ரேம்
- 8 ஜிபி மெமரி
- ஆண்ட்ராய்டு 9.0 
- பில்ட்-இன் குரோம்காஸ்ட், கூகுள் அசிஸ்டண்ட், கூகுள் பிளே ஸ்டோர்
- வைபை Wi-Fi 802.11 b/g/n (2.4 GHz), ப்ளூடூத் 5.0
- 3 x HDMI, AV,  USB 2.0 x 2, ஈத்தர்நெட், ஆப்டிக்கல் அவுட்புட், மினி AV
- ப்ளூடூத் ரிமோட் 
- 24 வாட் பாக்ஸ் ஸ்பீக்கர்
- டால்பி ஆடியோ

இன்பினிக்ஸ் X1 40 இன்ச் FHD மாடல் ப்ளிப்கார்ட் தளத்தில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. இதன் அறிமுக விலை ரூ. 19,999 ஆகும். 

Tags:    

Similar News