செய்திகள்
சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்

திருப்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 42 பேர் கைது

Published On 2021-02-25 20:37 GMT   |   Update On 2021-02-25 20:37 GMT
திருப்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்பட 42 மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்:

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும். கடும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். தனியார் நிறுவனங்களில் 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கலெக்டர் அலுவலகம் முன்பு குடியேறும் போராட்டம் மற்றும் மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தினர்.

இந்த நிலையில் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று திருப்பூர் குமரன் சிலை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டுக்கொண்டே இருந்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் வடக்கு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்பட 42 மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News