செய்திகள்
வானிலை ஆய்வு மையம்

கனமழைக்கு வாய்ப்புள்ள 2 மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம்

Published On 2021-05-11 09:04 GMT   |   Update On 2021-05-11 09:04 GMT
தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு  வாய்ப்பு உள்ளது.



மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News