செய்திகள்
குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாக வெளியேறுவதை படத்தில் காணலாம்.

திருப்பூர் மாநகரில் குடிநீர் குழாய் உடைப்பால் வீணாக வெளியேறும் தண்ணீர்

Published On 2021-09-28 09:23 GMT   |   Update On 2021-09-28 10:18 GMT
திருப்பூர் கொங்குரோடு இ.எஸ்.ஐ.ஆஸ்பத்திரி அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் 5 அடி வரை பீறிட்டு வெளியேறியது.
திருப்பூர்:

திருப்பூர் மாநகர் பகுதியில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் சாலை மற்றும் சில பணிகளுக்காக குழிகள் தோண்டப்படும் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.

இதன் காரணமாக மாநகர் பகுதியில் குடிநீர் சப்ளையில் பல மாதங்களாக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள் போராட்டமும் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் திருப்பூர் கொங்குரோடு இ.எஸ்.ஐ.ஆஸ்பத்திரி அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் 5 அடி வரை பீறிட்டு வெளியேறியது. இதனால் அப்பகுதியில் ஆறுபோல் தண்ணீர் வீணாக வெளியேறியது. மேலும் அங்கு குளம்போல் தண்ணீர் தேங்கியது. 

மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் இப்படி தண்ணீர் வீணாக வெளியேறியது பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. எனவே ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். 

மேலும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News