செய்திகள்
கணபதிபாளையத்தில் உள்ள சாய ஆலையை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்த காட்சி.

தொழில் வளர்ச்சிக்கான உதவிகளை செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது-அமைச்சர் மெய்யநாதன் பேட்டி

Published On 2021-07-04 08:21 GMT   |   Update On 2021-07-04 08:21 GMT
சுத்திகரிப்பில் வெளி யேறும் திடக்கழிவுகள் சேகரிப்பு, கழிவு மேலாண்மை குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார்.
திருப்பூர்:

தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் திருப்பூரில்  ஆய்வு மேற்கொண்டார். திருப்பூர் - பல்லடம் ரோடு, அருள்புரம் அருகே கணபதிபாளையத்தில் உள்ள தனியார் சுத்திகரிப்பு மையத்துடன் கூடிய சாய ஆலையை பார்வையிட்டார்.சாப்ட்புளோ எந்திரங்களை பயன்படுத்தி  துணிகளுக்கு சாய மேற்றுதல், சாயக் கழிவுநீரை வேதியியல், உயிரியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சுத்திகரிக்கும் கட்டமைப்புகளை பார்வை யிட்டார். 

சுத்திகரிப்பில் வெளி யேறும் திடக்கழிவுகள் சேகரிப்பு, கழிவு மேலாண்மை குறித்து ஆய்வு செய்தார். அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி, கலெக்டர் வினீத், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய தலைவர் வெங்கடாச்சலம், மாவட்ட மாசுக்கட்டுப்பாடு வாரிய பொறியாளர்கள் சரவணகுமார், சாமிநாதன் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

பின்னர் சாய ஆலை வளாகத்தில் அமைச்சர்கள் மற்றும் கலெக்டர்,  மரக்கன்றுகளை நடவு செய்தனர்.அப்போது அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில், 

திருப்பூரில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. வெளிநாடுகளை மிஞ்சும் வகையில் சாய ஆலைகள் மற்றும் சுத்திகரிப்பு மையங்கள் தூய்மையாக உள்ளன. புதிய அரசு தொழில் வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை செய்து தர தயாராக உள்ளது என்றார்.

முருகம்பாளையம் சாயக்கழிவுநீர் பொதுசுத்திகரிப்பு மையத்தை பார்வையிட்ட பின் அமைச்சர் கூறும் போது, 

சாயநீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகள் வியக்கத்தக்க வகையில் உள்ளது. சுத்தி கரிப்பு மையங்களில், கலவை திடக்கழிவுகள் அதிகளவில் தேங்கியுள்ளன.  அவற்றை முறையாக அப்புறப் படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

Tags:    

Similar News