செய்திகள்

விராட் கோலி டிப்ஸ் இன்-ஸ்விங் பந்தை எளிதாக விளையாட உதவியது- ஹனுமா விஹாரி

Published On 2018-09-10 10:45 GMT   |   Update On 2018-09-10 10:45 GMT
இன்ஸ்விங் பந்தை எதிர்கொள்ள சிரமப்பட்ட நிலையில் விராட் கோலி சில அறிவுரைகளை வழங்கினார் என ஹனுமா விஹாரி தெரிவித்துள்ளார். #ENGvIND #HanumaVihari
இங்கிலாந்து - இந்தியா இடையிலான கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்டில் 24 வயதான ஆந்திராவின் ஹனுமா விஹாரி இடம்பிடித்தார். இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில் விஹாரி, ஜடேஜா (86 நாட்அவுட்) இணைந்து சிறப்பாக விளையாடி 56 ரன்கள் சேர்த்தார்.

இங்கிலாந்து மண்ணில் அறிமுக போட்டியில் 50 ரன்னுக்கு மேல் அடித்த 4-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். களம் இறங்கி பந்தை சந்திக்கும்போது சற்று திணறிய விஹாரி, அதன்பின்  சிறப்பாக விளையாடினார்.



இன்-ஸ்விங் பந்தை எதிர்கொள்ள விராட் கோலி டிப்ஸ் வழங்கினார் என விஹாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஹாரி கூறுகையில் ‘‘மேக மூட்டமாகவும், அதே சமயத்தில் ஸ்டூவர் பிராட், ஆண்டர்சன் ஆகிய தலைசிறந்த பவுலர்கள் பந்து வீசியதாலும் தொடக்கத்தில்  நான் நெருக்கடியில் இருப்பதாக உணர்ந்தேன். சில பந்துகளை சந்தித்த பிறகு, நெருக்கடி எளிதானது. ஜடேஜாவுடன் பார்ட்னர்ஷிப் சேர்ந்து விளையாடியது முக்கியமானது.

நெருக்கடி இருந்ததால் என்னுடைய முடிவுகள் சரியாக அமையவில்லை. ஆனால், மறுமுனையில் விளையாடிய விராட் கோலி என்னுடைய வேலையை எளிதாக்கினார். இன்-ஸ்விங் பந்தில் தான் தடுமாறினேன். அப்போது விராட் கோலி எனக்கு சில டிப்ஸ்களை வழங்கினார். இது என்னை வசதியாக விளையாட உதவியது’’ என்றார்.
Tags:    

Similar News