ஆட்டோமொபைல்

கூடுதல் பாதுகாப்பு வசதியுடன் ஹோன்டா மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம்

Published On 2019-03-15 11:32 GMT   |   Update On 2019-03-15 11:32 GMT
ஹோன்டா நிறுவனம் இந்தியாவில் தனது டிரீம் யுகா மற்றும் ஹோன்டா லிவோ மோட்டார்சைக்கிள்களில் கூடுதல் பாதுகாப்பு வசதியை வழங்கியிருக்கிறது. #Honda



ஹோன்டா நிறுவனம் இந்தியாவில் தனது டிரீம் யுகா மற்றும் லிவோ மோட்டார்சைக்கிள்களில் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் (சி.பி.எஸ்.) வசதியுடன் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. 

முன்னதாக ஹோன்டா நிறுவனம் தனது 110 சிசி திறன் கொண்ட வாகனங்களில் பாதுகாப்பு வசதியை வழங்கியிருந்தது. இந்நிலையில், இரண்டு மோட்டார்சைக்கிள்களில் சி.பி.எஸ். வசதியை சேர்த்திருக்கிறது. ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து 125சிசிக்கும் அதிக திறன் கொண்ட மோட்டார்சைக்கிள்களில் ஏ.பி.எஸ். வழங்க வேண்டும்.

புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்களது வாகனங்களில் பாதுகாப்பு வசதியை வழங்கி வருகின்றன. அந்த வகையில் ஹோன்டா நிறுவனமும் தனது மோட்டார்சைக்கிள்களை அப்டேட் செய்து வருகிறது. 



ஹோன்டா லிவோ மற்றும் டிரீம் யுகா மோட்டார்சைக்கிள்களில் பாதுகாப்பு தவிர எவ்வித அம்சங்களும் மாற்றப்படவில்லை. அந்த வகையில் இரு மோட்டார்சைக்கிள்களிலும் 109சிசி, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 8.4 பி.ஹெச்.பி. பவர், 9.09 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

ஹோன்டா டிரீம் யுகா சி.பி.எஸ். இருபுறங்களிலும் டிரம் பிரேக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் விலை தற்சமயம் விற்பனையாகும் சி.பி.எஸ். இல்லாத மாடலை விட ரூ.600 அதிகம் ஆகும். இந்தியாவில் சி.பி.எஸ். வசதி கொண்ட டிரீம் யுகா விலை ரூ.54,847 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

டிரம்-பிரேக் கொண்ட ஹோன்டா லிவோ சி.பி.எஸ். விலை ரூ.57,539 என்றும் டிஸ்க் பிரேக் கொண்ட சி.பி.எஸ். விலை ரூ.59,950 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News