செய்திகள்
இஸ்ரோ தலைவர் சிவன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் விருதை பெறும் காட்சி

இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Published On 2019-08-22 06:02 GMT   |   Update On 2019-08-22 06:02 GMT
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அறிவித்திருந்த அப்துல்கலாம் விருதினை இன்று வழங்கினார்.
சென்னை:

நாட்டின் 71-வது சுதந்திர தின விழா கடந்த 15ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியையேற்றி சுதந்திர தின உரையாற்றினார்.

இதனையடுத்து சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கினார். இதில் டாக்டர் அப்துல்கலாம் விருது போரூர் ராமச்சந்திரா பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் தியாகராஜனுக்கு வழங்கப்பட்டது.

துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது திருவண்ணாமலையைச் சேர்ந்த பிரித்தீக்கு வழங்கப்பட்டது. முதல்-அமைச்சரின் நல் ஆளுமை விருது தமிழ்நாடு போலீஸ் வீட்டு வசதி வாரியம், வேளாண்மை துறை, வணிக வரித்துறை ஆகியவற்றிற்கு வழங்கப்பட்டது.

இந்த விழாவில் இஸ்ரோ தலைவர் சிவனுக்கு விஞ்ஞான ஆராய்ச்சியில் சிறப்பாக செயல்பட்டு வருவதற்காக அப்துல்கலாம் விருது அறிவிக்கப்பட்டது.

ஆனால், அன்று வர இயலாத காரணத்தால், இன்று காலை முதல்வர் எடப்பானி பழனிசாமியை இஸ்ரோ தலைவர் சிவன் தலைமைச் செயலகத்தில் சந்தித்து விருது, காசோலையைப் பெற்றுக் கொண்டார். 
Tags:    

Similar News