உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

ஜி.எஸ்.டி. ரீபண்ட் தொகை - திருப்பூர் முகாமில் ஏற்றுமதியாளர்கள் விண்ணப்பம்

Published On 2021-12-08 07:45 GMT   |   Update On 2021-12-08 07:45 GMT
தகுதியுள்ளோருக்கு நிறுத்திவைக்கப்பட்ட ரீபண்ட் தொகை விடுவிக்கப்பட உள்ளது.
திருப்பூர்:

மத்திய ஜி.எஸ்.டி., திருப்பூர் கோட்ட அலுவலகத்தில் ஏற்றுமதியாளர்களுக்கான சிறப்பு சரிபார்ப்பு முகாம் தொடங்கி உள்ளது. ரீபண்ட் தொகையை தவறாக பெற்றிருக்கலாம் என்று வகைப்படுத்தப்பட்ட ஏற்றுமதியாளர்கள் (ரிஸ்கி எக்ஸ்போர்ட்டர்) சரிபார்க்க வேண்டிய பட்டியலில் சேர்க்கப்படுகின்றனர். 

இவர்களுக்கான ரீபண்ட் தொகைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சிறப்பு முகாமில் ‘ரிஸ்கி’ பட்டியலில் உள்ள ஏற்றுமதியாளர்களிடமிருந்து உரிய ஆவணங்கள் பெறப்பட்டு அதிகாரிகளால் பரிசீலனை செய்யப்படுகிறது. 

தகுதியுள்ளோருக்கு நிறுத்திவைக்கப்பட்ட ரீபண்ட் தொகை விடுவிக்கப்பட உள்ளது. திருப்பூரில் குமார்நகரில் உள்ள மத்திய ஜி.எஸ்.டி., துணை கமிஷனர் அலுவலகத்தில் சரிபார்ப்பு முகாம் நடைபெற்றது. முதல் நாளிலேயே, பின்னலாடை ஏற்றுமதியாளர் 10  பேர் விண்ணப்பித்தனர்.

இதுகுறித்து ஜி.எஸ்.டி., திருப்பூர் துணை கமிஷனர் சித்தார்த் கூறியதாவது: 

பெரும்பாலானோர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ரீபண்ட் பெறவில்லை. உரிய ஆவணங்கள் பெறப்பட்டு பரிசீலித்து வருகிறோம். ரிஸ்கி பட்டியலில் இடம்பெற்று ரீபண்ட் தொகை பெறமுடியாத நிலையில் உள்ள ஏற்றுமதியாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என்றார். 
Tags:    

Similar News