தொழில்நுட்பம்
போக்கோ டீசர்

விரைவில் இந்தியா வரும் போக்கோ சாதனம்

Published On 2020-06-04 05:32 GMT   |   Update On 2020-06-04 05:32 GMT
போக்கோ பிராண்டின் புதிய சாதனம் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.



போக்கோ பிராண்டின் புதிய சாதனத்தின் இந்திய வெளியீட்டை உணர்த்தும் டீசர் வெளியாகி உள்ளது. டீசர் வீடியோவில், ‘அடுத்த போக்கோ சாதனம் விரைவில் இந்தியாவில் அறிமுகம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவுக்காக தலைசிறந்த பொருட்களை அறிமுகம் செய்யும் நோக்கத்துடன் துவங்கினோம். இந்த கனவை எட்ட எங்களது நலம்விரும்பிகள் உதவியோடு தொடர்ந்து சிறப்பான அனுபவத்தை வழங்குவோம் என போக்கோ பிராண்டு பொது மேலாளர் மன்மோகன் தெரிவித்தார்.



கடந்த மாதம் போக்கோ எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல் சியோமி இந்தியா வலைதளத்தில் லீக் ஆனது. இது போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் விலை குறைந்த மாடல் ஆகும். ஏற்கனவே போக்கோ எஃப்2 முற்றிலும் புதிய மாடலாக இருக்கும் என்றும் ரெட்மி கே30 ப்ரோ மாடலை விட வித்தியாசமாக இருக்கும் என போக்கோ பிராண்டு அறிவித்தது.

தற்போதைய டீசரின் படி புதிய சாதனம் போக்கோ எம்2 ப்ரோ மாடலா அல்லது போக்கோ எஃப்2 மாடலா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

கடந்த மாதம் போக்கோ பிராண்டு போக்கோ பாப் பட்ஸ் எனும் பெயரில் முதல் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை வெளியிட இருப்பதாக அறிவித்தது. போக்கோ இந்தியா பொது மேலாளர் சமீபத்தில் போக்கோ பிராண்டு மற்றொரு புதிய ஆடியோ சாதனத்தை இந்தியாவில் வெளியிட இருப்பதாக தெரிவித்தார்.
Tags:    

Similar News