வழிபாடு
திருநின்றவூர் பக்தவத்சல பெருமாளுக்கு திருப்பதி ஏழுமலையான் வழங்கிய சீர்

திருநின்றவூர் பக்தவத்சல பெருமாளுக்கு திருப்பதி ஏழுமலையான் வழங்கிய சீர்

Published On 2022-03-27 06:42 GMT   |   Update On 2022-03-27 06:42 GMT
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பாக திருநின்றவூர் பக்தவத்சல பெருமாளுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பிப்பது 2010-ம் ஆண்டில் இருந்து நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீதேவி, பூதேவி சமேத பக்தவத்சல பெருமாள் கோவில் உள்ளது. கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. அதையொட்டி திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில் திருமலை பெரிய ஜீயர் சுவாமிகள், திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி ஆகியோர் பங்கேற்று பட்டு வஸ்திரம், மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, பூ, பழம், லட்டு பிரசாதம், மலர்மாலை, துளசி மாலை உள்ளிட்ட மங்கல பொருட்களை தட்டில் வைத்து தலையில் சுமந்தபடி மேள தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக சென்று சமர்ப்பித்தனர்.

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பாக பட்டு வஸ்திரம் சமர்ப்பிப்பது 2010-ம் ஆண்டில் இருந்து நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News